அனைவருக்கும் வணக்கம்.அறத்தமிழன் புலனக் குழுமம் சார்பாக, விடுதலை வீரர்,செக்கிழுத்தச்செம்மல்,கப்பலோட்டியத்தமிழன் வ.உ.சி.அவர்களின் 150 வது பிறந்தநாளினை கொண்டாடும் விதமாக 150 பேர் கவிதை எழுதியிருந்தனர்.நம்முடைய பல்கலைக் கழகத்தை சார்ந்த 15 க்கும் மேற்பட்டோர் அய்யா வ.உ.சி.அவர்களைப்பற்றி எழுதியிருந்தனர்.நம்முடைய பல்கலையின் தலைவர் உயர்திரு A.C.அருண்குமார் அய்யா அவர்கள் கவிதை எழுதியவர்களுக்கு சான்றிதழ் மற்றும் கவிதை நூலினை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.உடன் துணைவேந்தர்,இணைப்பதிவாளர்,புலத்தலைவர்கள்,தமிழ்த்துறைத் தலைவர் உடனிருந்தனர்.