சென்னை மதுரவாயல் அடையாளம்பட்டில் உள்ள ஸ்ரீ லலிதாம்பிகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வணிகவியல் துறை சார்பாக உலக தொண்டு தினத்தினை முன்னிட்டு இரத்ததான முகாம் 06.12.2021 திங்களன்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள இரத்த வங்கி பிரிவில் நடைபெற்றது. பல்கலைக் கழக தலைவர் உயர்திரு Er.A.C.S அருண்குமார் அவர்களின் தலைமையில் பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. S.கீதாலட்சுமி அவர்கள் முன்னிலையில் பதிவாளர் C.B.பழனிவேலு, புலத்தலைவர் Dr.T.பாலசுப்பிரமணியன், முதல்வர் Dr.சித்தி அத்திய முணவர, மருத்துவ கண்காணிப்பாளர் Dr.S.V. செந்தில்நாதன் மற்றும் வணிகவியல் துறை தலைவர் Dr.C.B.செந்தில்குமார் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும், இத்துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இரத்ததானம் அளித்தனர். நிறைவாக இரத்ததான கொடை அளித்த மாணவர்களுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் கரங்களால் சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது.