புத்தக வெளியீட்டு விழா
டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் வேந்தரும் நிறுவனருமான உயர்திரு. ஏ.சி.சண்முகம் அவர்கள் தன்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடினார் அதன் ஒரு பகுதியாக இப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவர் திரு.சி. வெற்றிவேல் அவர்கள் பதிப்பித்த இருபுத்தகங்கள் வெளியிடப்பட்டன, 107 ஆண்டுகளுக்கு முன்பு (1913) வெளியிடப்பட்ட வேதகிரி முதலியாரின் உரையுடன் கூடிய நாலடியார் என்ற மிகச்சிறந்த புத்தகம் வெளியிடப்பட்டது. இப்புத்தகத்தை இப்பல்கலைக் கழக நிறுவனர் வெளியிட்டார், மொழியரசி என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது. இப்புத்தகம் 75 ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புலவர் சாமி வேலாயுதம் பிள்ளை அவர்கள் தொகுத்த புத்தகம் ஆகும். இந்த இரு புத்தகங்களும் மறுபதிப்பு வராமல் இருந்தது காரணம் இந்த இரு புத்தகங்களின் பிரதி ஒன்று கூட இல்லை. திரு.சி. வெற்றிவேல் அவர்களின் எம்.ஜி.ஆர் ஆவணக்களஞ்சியத்திலிருந்து எடுத்து வெளியிடப்பட்டது.

புகைப்படம்: (இடமிருந்து வலம்) முனைவர் கவிதா, டாக்டர் அருணாசலம் (புலத்தலைவர்) இணைப்பதிவாளர். திரு, சு.இராமலிங்கம், திரு.சி. வெற்றிவேல் (துறைத்தலைவர்) நிறுவனர் மற்றும் வேந்தர் உயர்திரு நிறுவனர் மற்றும் வேந்தர் உயர்திரு ஏ.சி.சண்முகம் அவர்கள், உயர்திரு ,தலைவர் A.C.S. அருண்குமார் அவர்கள், நிறுவனத்தின் செயலாளர் உயர்திரு. ரவிக்குமார் அவர்கள் மற்றும் திரு, பாலாஜி அவர்கள்.